adsயாராவது முன்வர மாட்டார்களா...? மனது கனக்கிறது...!!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் கோமான்புதூரில், கோமான் மொட்டையார் பள்ளியையொட்டி மேற்குப் பகுதியில் குடியிருந்து வருகிறார் - திருவனந்தபுரத்தில் பல்லாண்டு காலமாக சுண்டல் வணிகம் செய்யும் சகோதரர் உபைத் - வயது 45. [தொடர்பு எண்: +91 90422 72080]. இவரது மனைவி பெயர் ஹாஜரா - வயது 35. இடியாப்பம் சுட்டு வணிகம் செய்து வருகிறார். இவர், கோமான் மொட்டையார் பள்ளியில் 25 ஆண்டுகள் இமாமாகப் பணியாற்றிய நெட்டை லெப்பை அவர்களின் பேத்தியாவார். கணவன் - மனைவி ஆகிய இவ்விருவரின் சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது.

சில நாட்களுக்கு முன், தங்கை ஹாஜரா  11ஆம் வகுப்பு பயிலும் தன் மகள் மஷ்கூராவுடன் பேருந்தில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில், அவரது ஒரு கால் முற்றிலும் நொறுங்கி, தூள் தூளாகிவிட்டது. (படம் இணைக்க மனமுமில்லை, இணைக்காமல் விடுவதற்கு வழியுமில்லை என்பதால் அதையும் இணைத்துள்ளேன்...)
0050.jpg
உடனடியாக நாகர்கோவில் திரவியம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரின் ஒரு கால் மூட்டுக்குக் கீழ் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுவிட்டது. மற்றொரு காலில் இரும்புத் தகடு கொண்டு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

பற்றாக்குறைக்கு, இவருடன் சென்ற மகள் மஷ்கூராவுக்கு தலையில் பலத்த அடி பட்டு 8 தையல் போடப்பட்டுள்ளது. இந்த இளம் வயதில் அந்த நங்கையின் 6 பற்களும் விழுந்துவிட்டன.

இவர்கள் அனைவருக்குமாக மொத்தத்தில் 6 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் செலவு உள்ளது. அதை எதிர்கொள்ளும் தகுதியில் குடும்பத்தின் பொருளாதார நிலை இல்லை. ஏதோ மக்கள் நலம் நாடும் நான்கு அமைப்புகளிடம் சொல்லி உதவி கோரலாம் என்றால், அவர் குடும்பத்தில் அதற்குப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லை. இருக்கும் சிலரும் மருத்துவமனையில்!

இறைவா! யாருக்கும் வரக்கூடாது இனி இந்தத் தொல்லை!!

இரக்கமுள்ள மக்களே...! என்னால் இயன்றது எழுதித் தெரிவிப்பதுதான்! ஏதோ ஓரளவுக்குச் செய்துள்ளேன்... இதைப் பார்க்கும் தாங்கள், “நல்ல பதிவு” என்று கருதி வெறும் “ளிகெ” போட்டு முடித்துவிடாமல், இயன்றளவுக்கு ஏனையோருக்கும் பகிருவீர்கள் என்றும், உங்களால் இயன்றதை நன்கொடையாக அளிக்கும் மனதுடன் இந்தப் பதிவிற்கு “ளிகெ” போடுவீர்கள் என்றும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

எனது இந்தப் பதிவு, அக்குடும்பத்திற்கு நிறைவான பயனை அளிப்பதும், வீணாய்ப் போவதும் நம் கைகளில்தான் உள்ளது...

இரக்க மனமுள்ளோர் :

K. ஃபாத்திமா
A/C. No. 0491 01 0000 12189
இந்தியன் ஓவர்ஸிஸ் பேங்க்

என்ற வங்கிக் கணக்கிற்கு, உங்களால் ஆனதை போர்க்கால அடிப்படையில் மிக விரைவாக வழங்கியுதவுமாறு, என்னையறிந்த உங்கள் யாவரையும் உரிமையுடன் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாம்வல்ல இறைவன், பாதிக்கப்பட்டுள்ள சகோதரிக்கும், அவரது மகளுக்கும் பூரண சுகமளிப்பானாக... இதுபோன்ற நிலை இனி யாருக்கும் ஏற்படாமல் பாதுகாப்பானாக... இவர்களுக்கு உதவுவதன் மூலம் நமக்கு எந்தத் தீவினையும் நேராமல் பாதுகாப்பானாக, ஆமீன்.
 
எற்கனவே 6 இலட்சம் தேவைப்படுவதாக பதிவிட்டிருந்தோம். தற்போது இவர்களின் மருத்துவ செலவிற்கான நிதியை சேகரித்து வழங்க, உலக காயல்நல மன்றங்களின் மருத்துவ உதவித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபேர் அசோஷியேசன் பொறுப்பெடுத்துள்ளது.
 
எனவே இதுவகைக்கான இனி உதவ விரும்புவோர்  காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபேர் அசோஷியேசன் செயலாளர் அல்ஹாஜ் A. தர்வேஷ் முஹம்மது அவர்களை 98653 46964 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
தகவல் :
சகோ. எம்.ஏ.கே. ஜெய்னுல் ஆப்தீன்,
காக்கும் கரங்கள்  நற்பணி மன்றம்.
14 Oct 2015

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
seyed Says:
Oct 14 2015 9:40PM (IST)

அரசு பேருந்தில் பயணம் செய்து மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்து நடந்துள்ளதால் அரசின் மூலம் நிதி உதவியும் கட்டாயம் பெற முடியும் . மற்ற அமைப்பும் உதவி செய்யனும் . அரசு உதவியை தவற விடாதீர்கள்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top