ads



புனித ஹஜ்ஜூப் பயணிகளுக்காக மதினாவில் புதிய விமான நிலையம் திறப்பு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
medine.jpg
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக சவுதி அரேபியா அரசு 80 லட்சம் பயணிகள் பயனடையும் வகையில் புதிய சா்வதேச விமான நிலையத்தை திறந்துள்ளது.

saudia.jpgசவுதி அரேபியாவின் மதினா நகாில் அரசு தரப்பில் ஹஜ் பயணிகள் வசதிக்காக புதிய பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டது. இதற்காக 120 கோடி ரூபாய் செலவிட்டது.

saudia.jpgஇந்த விமான நிலையத்தில் 80லட்சம் பயணாளிகள் பயனடையலாம் என்று அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இளவரசா் முகமது பின் அப்துல் அஜிஸ் விமான நிலையம் என பெயாிடப்பட்டது.

saudia.jpgவிமான நிலையத்தை சவுதி மன்னா் சாலமன் நேற்று திறந்து வைத்தார். சவுதி அரேபியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டு பராமாிக்கப்படும் விமானநிலையம் என்ற பெருமை இந்த விமான நிலையத்திற்கு கிடைத்துள்ளது.

saudia.jpgமுதல் நிலை செயலாக்கத்தில் விமான நிலையத்தின் 40 லட்சம் சதுர மீட்டா்கள் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என்றும் ஆண்டு முழுவதும் 80 லட்சம் பயணாளிகள் இதன் மூலம் பயன் பெறலாம் என்றும் கூறப்பட்டது.

saudia.jpgஅடுத்த இரண்டு கட்ட விரிவாக்கத்தில் விமானநிலையத்தில் 180 லட்சம் சதுர மீட்டா் பயன்பாட்டிற்கு வரும் என்றும் 400 லட்சம் பயணிகள் பலன் அடைவார்கள் என்றும் தொிவிக்கப்பட்டது.

saudia.jpgவிமான நிலையம் அந்நாட்டு விமானதுறைக்கு சொந்தம் என்றாலும் பராமாிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியா விமானத்துறை தற்போது 27 விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது.

saudia.jpgகச்சா எண்ணெய் அல்லாத துறைகளில் வருவாய் ஈட்ட அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் விமானத்துறையும் ஒன்று என்றும் கூறப்பபட்டது. நாட்டில் உள் கட்டமைப்பு மற்றும் தனியார் மயமாக்கல் விரைந்து நடந்து வருவதாக விமானத்துறை தலைவா் சுலைமான் அல் அம்தான் தொிவித்தார்.

saudia.jpgசவுதியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவதாக அவா் கூறினார். சவுதியின் விமானத்துறை நவீன மயமாக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவா் தொிவித்தார்.

saudia.jpgஅமொிக்கா அல்லாத வெளிநாட்டு விமானநிலையங்களில், சவுதியின் மதினாவில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய விமான நிலையத்திற்கு அமொிக்க பசுமை கட்டட கவுன்சில் வழங்கும் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புக்கான  தங்க தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

saudia.jpgஇந்த விமான நிலையத்தில் 6 வாயில்கள் உள்ளது. விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 6 ஆயிரம் போ் அமரலாம் என்பதும் சிறப்பாகும்.

saudia.jpgபயணிகளின் உடமைகளை கையாள்வதற்காக 36 மின்தூக்கிகளும், 28 மின்சார படிகட்டுகளும், 23 தொடா் பெல்ட்களும் அமைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

நன்றி.
தினத்தந்தி.

தகவல் :
சகோ. லரீஃப்.
9 Jul 2015

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
K.D.N.MOHAMED LEBBAI Says:
Jul 11 2015 11:09AM (IST)

அஸ்ஸலாமு அலைக்கும்


மாஷா அல்லாஹ் ....தங்களின் நிழற்படத்தை பார்க்கவும் ,, செய்தியை அறிந்தும் மற்றற்ற மகிழ்ச்சியானது ...... ஹாஜிகளின் கஷ்டத்தை உணர்ந்து சவுதி அரசாங்கம் இப்படி ஒரு நல்ல செயலை வழங்கி இருப்பது பாரட்டுக்குரியது ......

இனி மரியாதைக்குரிய நம் ஹாஜி மார்கள் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் சிறப்புமிக்க மதினாவால் தங்களின் தாயகம் திரும்பலாம் ......அல்ஹம்துலில்லாஹ் ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top