ads



ரமழான் 1436: சிங்கையில் காயலர்கள் ஏற்பாட்டில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சிங்கப்பூரில் பெடூக் பகுதியில், காயலர்கள் ஏற்பாட்டில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் ரமழான் மாதம் முழுக்க இஷா மற்றும் தராவீஹ் தொழுகையை கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
S4.jpg
சிங்கை கா.ந.மன்றத்தின் ஆலோசகரும், சமூக ஆர்வலருமான ஹாஜி- பாளையம் P.M.A.முஹம்மத் ஹஸன் அவர்களது இல்லத்தில் வைத்து, அன்றாடம் 21.00 மணியளவில், இஷா மற்றும் தராவீஹ் தொழுகை நடத்தப்பட்டு வருகின்றது. காயல்பட்டினத்தை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஹாஃபிழ்கள் ஒருங்கிணைந்து தொழுகையை வழி நடத்தி வருகின்றனர்.
S5.jpg
சிங்கையில் பணியாற்றி வரும் இளவயதுடைய ஹாஃபிழ்கள் தாம் மனனம் செய்த திருமறையை நினைவில் தக்க வைத்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எண்ணி ஆர்வத்துடன் இரவுத் தொழுகையில் பங்கெடுத்து வருகின்றனர். பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்படுள்ளது. நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் தேனீர் வழங்கி உபசரிக்கப்படுகிறது.

கடந்த  2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் & மற்றும் நிழற்படங்கள் :
ஹிஜாஸ் மைந்தன் - சிங்கப்பூர்.
9 Jul 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top