ads



மைக்ரோகாயல் அமைப்பின் காயல் மெடிக்கல் கார்டு (KAYAL MEDICAL CARD) மற்றும் Chronic Detection and Treatment (CDT) க்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 முதல் விநியோகிக்கப்படுகின்றன!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
மைக்ரோகாயல் அமைப்பின் காயல் மெடிக்கல் கார்டு (KAYAL MEDICAL CARD) மற்றும் Chronic Detection and Treatment (CDT) க்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 முதல் விநியோகிக்கப்படுகின்றன. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :-

அஸ்ஸலாமு அலைக்கும், மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்த் அண்ட் வெல்பேர் அசோசியேசன், நம் KMT மருத்துவமனையுடன் இணைந்து பைலட் ப்ராஜக்ட் என்ற முறையில் 2013 செப்டம்பர் முதல் 2014 மார்ச் வரை சுமார் 50 பயனாளி குடும்பங்களுக்கும், 2014-2015 நிதியாண்டில் சுமார் 220 பேருக்கும் இந்த காயல் மெடிக்கல் கார்டு வழங்கி இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ கன்சல்டேசன், பரிசோதனைகள், மருந்துகள் ஆகியவற்றின் மதிப்பில் 25% மட்டும் பயனாளிகளால் செலுத்தி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நல்ல மருத்துவ சேவையை பெற்றுள்ளனர்.

மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்த் அண்ட் வெல்பேர் அசோசியேசன் KMT மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தும் காயல் மெடிக்கல் கார்டுக்கான (KMC) 2015-2016 பருவ வருட விண்ணப்பங்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச் 23 - 25) முதல் கீழ்க்காணும் இடங்களில் வினியோகிக்கப்படும்.

(1) மைக்ரோகாயல் அலுவலகம், மூன் பளாசா, எல்.கே.லெப்பைதம்பி சாலை, காயல்பட்டணம். தொலைபேசி எண்: 04639 281381 / 9150177199 (மூன்று தினங்கள் மட்டுமே)

இந்த சேவையை கீழ்காணும் நபர்கள் மற்றும் பெற தகுதியானவர்கள் :

(1) மஸ்ஜித், மதரசாவில் பணிபுரிபவர்கள்

(2) இஸ்லாத்தில் திரும்பியவர்கள்

(3) விதவைகள்

(4) அனாதைகள்

(5) வீட்டில் உழைக்க சக்தி படைத்தவர்கள் இன்றி வாழ்பவர்கள்.

மேலும் மேற்கூறப்பட்ட 5 வகையினரும் ஜகாத் வாங்க தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும்.

இலவச மாஸ்டர் செக்-அப் :

மேலும் இன்ஷா அல்லாஹ் ரிதா பவுண்டெசனின் முழு உதவியில் சுமார் 50 பேருக்கு (இஸ்லாத்தில் புதிதாக வந்தவர்களுக்கு முன்னுரிமை) ருபாய் 800 மதிப்பிலான மாஸ்டெர் செக்-அப் இலவசமாகவும் மற்றும் இன்னும் இந்த கார்ட் பெரும் 150 பேருக்கு வெரும் 200 ருபாயில் ரிதா பவுண்டெசனின் உதவியில் மாஸ்டெர் செக்-அப் எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் :
அட்மின் - மைக்ரொகாயல்.காம்
15 Mar 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top