ads



மாவட்ட கால்பந்து லீக் போட்டி 2015 : KSC அணியின் வெற்றி பயணம் தொடர்கிறது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
KSC_1.jpg
2015-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலானா கால்பந்து லீக் போட்டிகள் கடந்த 10/01 முதல் நடைபெற்று வருகின்றது.

இன்று (25/01) மாலை வீரபாண்டியன் பட்டணம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காயல்பட்டினம் KSC அணியும், புன்னக்காயல் அணியும் விளையாடின.

போட்டியின் முதல் பாதி முழுவதும் இரண்டு அணிகளும் சமபளத்துடன் மோதியதால் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் KSC அணியினர் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து புன்னக்காயல் அணியை தினறடித்தனர். பின்னர் இறுதிவரை போராடிய புன்னக்காயல் அணியினரால் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. எனவே KSC அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

KSC அணிக்காக முதல் கோலை முஹம்மது அலியும், இரண்டாவது கோலை முஹம்மது ஹனீஃபாவும், மூன்றாவது கோலை அக்கீல் என்ற வீரரும் அடித்தார்கள்.

இவ்வெற்றியின் மூலம் KSC அணியினர் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலாவது இடத்தை தக்கவைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
25 Jan 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top