ads2016 தோ்தலில் தமிழகத்தில் காலூன்ற திட்டமிடும் பாரதீய ஜனதாவை முறியடிக்க வேண்டும் : காயல்பட்டினம் விழாவில் தொல்.திருமாவளவன் பேச்சு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் திருவள்ளுவா் மன்றத்தின் 50-வது ஆண்டு விழாவையொட்டி பொன்விழா மலா் வெளியீடு மற்றும் பாிசளிப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் செ.ராஜன் தலைமையில் நடைபெற்றது.

மன்ற பொருளாளா் கொ.பிரமானந்தன் வரவேற்றுப் பேசினார். வழக்கறிஞா் அ.சதீஷ்பாலன், சு.பன்னீர் செல்வம், தா.திருத்துவராஜ், கே.வி.ஏ.டி.கபீர், ஜெ.மஹ்மூதுல் ஹசன், காயல் அமானுல்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினா்.
vc1.jpg
விழாவில் தொல்.திருமாவளவன் பொன்விழா மலரை வெளியிட அதனை தொழிலதிபா் ஜே.மஹ்மூதுல் ஹசன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பொன்விழா மலரை வெளியிட்டு, கல்வி பாிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவா் பேசியதாவது...

திருவள்ளுவாின் பெயாிலான ஒரு மன்றம் இங்கு 50 ஆண்டுகளாக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது என்றால் அது எளிதான காரியம் அல்ல. அதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரால் ஒற்றுமை உணா்வுடன் நடத்தப்படுவது மிகவும் போற்றுதலுக்கு உரியது. பூர்வீக தமிழகத்தில் சாதிகள் இருந்த போதிலும் அதன் பெயரால் வேறுபாடுகளும் மோதல்களும் இருந்ததில்லை.

சாதியைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் ராமதாஸ்களும், மதத்தை அரசியலாக்கும் மோடிகளும் அப்போது இல்லை. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே திட்டமிட்டு வெறுப்புணா்வை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் அடைந்து பிரதமா் நாற்காலியில் அமா்ந்து கொண்டவா்தாம் மோடி.

வட மாநிலங்களில் ராம்விலாஸ் பஸ்வான், மாயாவதி உள்ளிட்ட பல தலைவா்கள் பாரதீய ஜனதாவுடன் உறவாடி ஆட்சியைப் பிடித்துள்ளனா். ஆனால் அம்பேத்காின் கொள்கை வழியில் உறுதியுடன் மதவாதத்தை எதிர்த்து வரும் ஒரே இயக்கம்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

திருக்குறளில் இல்லாதததும், சொல்லாததும் வேறு எதிலும் இல்லை. திருக்குரான், பைபிள், புத்தாின் போதனைகள் ஆகியவற்றை படிப்பதற்கும் திருக்குறளை படிப்பதற்கும் வேறுபாடுகள் இல்லை என்றே நான் நம்புகிறேன். இலக்கிய நடையில் இருக்கும் குறளின் பொழிப்புரையை குழந்தைகளுக்கு நாள்தோறும் கற்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் இஸ்லாமிய மக்களும், தலித் மக்களும் இணக்கத்துடன் வாழ்ந்து வருவதைப்போல அனைத்து மக்களும் வாழ வேண்டும். மதவாதத்திற்கும், சாதி வெறிக்கும் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது.

2016-ல் நடக்க இருக்கும் தோ்தலில் எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு முயற்சி செய்து வருகிறது. அதனை முறியடிக்க நாம் பாடுபடவேண்டும். - இவ்வாறு அவா் பேசினார்.
vc2.jpg
விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் முரசு. தமிழப்பன், முன்னாள் செயலாளா் சொ.சு.தமிழினியன் மற்றும் யாசா் அராபாத், அல்அமீன், பேச்சிமுத்து, சுதாகா், சங்கத்தமிழன், அமலன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனா்.

தகவல் மற்றும் புகைப்படங்கள் :
சகோ. பார்த்திபன்.
19 Jan 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top