ads



மே:3-ல் துவங்குகிறது ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் 50-வது பொன்விழா ஆண்டு அகில இந்திய கால்பந்து போட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

DSC00277.JPG
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) கடந்த 49 ஆண்டுகளாக மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு அகில இந்திய கால்பந்து போட்டியை நடத்தி வருகின்றது.
DSC00278.JPG
இவ்வருடம் 50-வது ஆண்டு போட்டியை சிறப்பாக நடத்திட திட்டமிடப்பட்டு, அதற்கான முதலாவது ஆலோசனைக் கூட்டம் நேற்று (17/07) ஐக்கிய விளையாட்டுச் சங்க பொன்விழா கட்டிடத்தில் நடைபெற்றது.
DSC00279.JPG
இக்கூட்டத்திற்கு ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் ஹாஜி பல்லாக்கு லெப்பை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
DSC00280.JPG
கூட்டத்தில் விவாதித்து முன்மொழியப்பட்ட பொருள்களாவது :-


USC_1.jpgபொன்விழா ஆண்டு போட்டியை வருகின்ற மே மாதம் 3-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) துவக்கி, மே மாதம் 24-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை நடத்துவது என்று முன்மொழியப்பட்டது.

USC_1.jpgஇப்போட்டியில் 20 அணிகளை விளையாட அழைப்பது என்றும், அதில் இந்தியாவில் தலைசிறந்த 8 அணிகளையும், 12 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகளையும் அழைப்பது என்றும் முன்மொழியப்பட்டது.

USC_1.jpgபொன்விழா ஆண்டு இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ. ஒரு லட்சம் பரிசாகவும்,

இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ. 60 ஆயிரம் பரிசாகவும்,

அரையிறுதிக்கு தகுதி பெற்ற இதர இரண்டு அணிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசாகவும் வழங்க முன்மொழியப்பட்டது.

USC_1.jpgபோட்டியின் துவக்க விழா மற்றும் இறுதி போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு மதிப்பிற்குரிய இரண்டு சிறப்பு விருந்தினர்களை அழைக்கலாம் என முன்மொழியப்பட்டது.

USC_1.jpgபொன்விழா ஆண்டையொட்டி, ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கலாம் என முன்மொழியப்பட்டது.

USC_1.jpgபொன்விழா ஆண்டு போட்டிகளுக்கான சீசன் டிக்கட்டுகளான சேர் ரூ.700 மற்றும் கேளரி ரூ.500 என நிர்ணயிக்கலாம் என முன்மொழியப்பட்டது.

முன்மொழியப்பட்ட இவ்விசயங்கள் வருகின்ற பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
19 Jan 2015

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top