ads



மாவட்ட கால்பந்து லீக் போட்டி 2015 : KSC அணி வெற்றி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
ball.jpg
2015-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலானா கால்பந்து லீக் போட்டிகள் கடந்த 10/01 முதல் நடைபெற்று வருகின்றது.

இன்று (18/01) மாலை DCW மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காயல்பட்டினம் USC அணியும்,  KSC அணியும் விளையாடின.

போட்டியின் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக விளையாடிய KSC அணியினர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி அடுத்தடுத்து 3 கோல்களை அடித்தனர். அந்த அணிக்காக லத்தீப் முதல் கோலையும், முஹம்மது அலி இரண்டாவது கோலையும், ஹனீஃபா மூன்றாவது கோலையும் அடித்தனர். இதனையடுத்து முதல்பாதி முடிவில் KSC அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் USC அணியினருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர். அந்த அணிக்காக தீன் முஹம்மது மற்றும் கிதுர் ஃபைஸல் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனையடுத்து ஆட்டத்தில் சூடுபிடித்தது. தொடர்ந்து போராடிய  USC அணியினரால் மேலும் கோல் ஏதும் அடிக்க இயலவில்லை எனவே KSC அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.
18 Jan 2015

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
செய்யிது அஹமது Says:
Jan 19 2015 1:54PM (IST)

''இன்று (18/01) மாலை DCW மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காயல்பட்டினம் USC அணியும், KSC அணியும் விளையாடின.''

முதலில் வெற்றி பெற்ற KSC, வெற்றிக்கு முனைந்த USC அணிகளுக்கு பாராட்டுக்கள்.

அடுத்து DCW மைதானத்தில் விளையாடுவது ஹராம் என்று கூறியவர்கள் எங்கே? MEGA என்றும் KEPA என்றும், அவர்கள் சார்ந்த இணையதளமும் ஊரை பிளவு படுத்திய அரசியல் புரோக்கர்கள் - விளையாட்டை விளையாட்டாகவே எடுத்து விட்டார்கள் போலும்.

கல்வி சம்பந்தமாக கல்லூரி மாணவிகள் DCW சென்ற விக்ஷயத்தில் மாணவிகளையும் கல்லூரி நிர்வாகத்தையும் கடுமையாக சாடியவர்கள் / கண்டித்தவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்?

விளையாட்டை கண்டு ரசிக்க DCW வரை சென்ற KEPA, MEGA அமைப்புகளில் உள்ளவர்கள் சிலரின் காட்சிகளை அட்மின் வெளியிட்டு இருந்தால் அவர்களது நயவஞ்சகம் / கபட நாடகம் அம்பலமாகி இருக்கும்.

DCW நிர்வாகத்துடன் எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது என்று கொக்கரித்த கும்பல் இது கூடும் இது கூடாது என்று அவர்கள் பாணியில் நோட்டீஸ் / போஸ்டர் ஒட்டினால் நன்றாக இருக்கும்.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top