ads



KSC-ல் shuttlecock உள்விளையாட்டு அரங்க திறப்புவிழா நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
DSC00093.JPG
காயல்பட்டினம், காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள shuttlecock உள்விளையாட்டு அரங்கத்தின் திறப்புவிழா இன்று (29/12) மாலை நடைபெற்றது.
DSC00096.JPG
தூத்தூக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உயர்திரு D.கந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். காயல் ஸ்போர்டிங் கிளப்பின் தலைவர் ஹாஜி வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஜனாப். R.S.லத்தீப் ஹாஜி, ஜனாப். பேராசிரியர் சதக்தம்பி, ஜனாப். M.M.முஹம்மது சுல்தான், ஜனாப். சலீம், ஜனாப். மரைக்கார், ஜனாப். ஹாஜி S.அக்பர்ஷா, ஜனாப். ஹாஜி பாளையம் ஹஸன், ஜனாப். வாவு சம்சுத்தீன் ஹாஜி, ஜனாப். முஹம்மது இஸ்மாயில், ஜனாப். அபூபக்கர், ஜனாப். கஃப்பார் ஹாஜி மற்றும் மாவட்ட இறகுபந்து கழகத்தின் செயலாளர் திரு. S.D.R. சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
DSC00089.JPG
நிகழ்வின் துவக்கமாக சிறப்பு விருந்தினர் அவர்கள் உள்விளையாட்டு அரங்கின் ரிப்பனை கத்தரித்து திறந்துவைத்தார்கள். நிகழ்வில் அடுத்ததாக, ஹாஃபிழ் முஹம்மது நூகு இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து M.M.சாஹூல் ஹமீது வரவேற்புரையாற்றினார். தொடராக தலைவர் ஹாஜி வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான்  மற்றும் செயலாளர் ஜனாப். பேராசிரியர் சதக்தம்பி ஆகியோர் உரையாற்றினார்கள்.
DSC00097.JPG
நிகழ்வின் தொடராக சிறப்பு விருந்தினர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து நன்றியுரைக்குப்பின் ”துஆ”வுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
DSC00098.JPG
பின்னர் shuttlecock விளையாட்டை நிகழ்ச்சியின் தலைவர் மற்றும் முன்னிலை வகித்தோர் துவக்கிவைத்தார்கள். அதனையடுத்து, மஃரிப் தொழுகைக்கு பின்னர் காட்சிப் போட்டி நடைபெற்றது. Video-Show.jpg
IMG-20141229-WA0006.jpg
30 Dec 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top