ads



அகில இந்திய கால்பந்து போட்டி 2014 : துவக்க போட்டியில் கோஸ்டல் - திருவனந்தபுரம் அணி வெற்றி!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
DSC08498.JPG
மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 49-வது அகில இந்திய கால்பந்து போட்டி இன்று (08/05) மாலை காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் கோஸ்டல் - திருவனந்தபுரம் அணியினரும், கோச்சிங் சென்டர் - காரைக்கால் அணியினரும் விளையாடினார்கள்.

சமபளத்துடன் விளையாடிய இரண்டு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் சமஅளவில் கிடைத்த போதும் அவைகளை தவறவிட்டனர். முதல் பாதி ஆட்டம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தனர்.

பின்னர் முதல் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, வாவு வஜிஹா கல்லூரியின் நிறுவன தலைவரும், காயல்பட்டினம் நகராட்சியின் முன்னால் தலைவரும், காயல் ஸ்போர்டிங் கிளப்பின் தலைவருமான அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு ஆட்ட வீரர்களை ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் ஜனாப்.P.S.A.பல்லாக்கு லெப்பை அறிமுகம் செய்து வைத்து பொன்னாடை போர்த்தினார்கள். காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலாளர் பேராசிரியர் ஜனாப்.K.M.S.சதக்கு தம்பி அவர்களுக்கு, ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஜனாப்.P.S.M.இல்லியாஸ் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் காரைக்கால் அணியின் பின்கள வீரர் கோல் எல்லைக்குல் செய்த தவறின் காரணமாக திருவனந்தபுரம் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை சிறப்பாக பயன்படுத்திய அந்த அணியினர் கோலடித்தனர். பின்னர் இறுதி வரை போராடிய காரைக்கால் அணியினரால் கோல் அடிக்க இயலவில்லை. எனவே திருவனந்தபுரம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
5555555.JPG
இவ்வெற்றியின் மூலம் நாளை (09/05) மாலை நடைபெற உள்ள போட்டியில் திருநெல்வேலி மாவட்ட கால்பந்து கழக அணியை திருவனந்தபுரம் கோஸ்டல் அணியினர் எதிர் கொள்கிறார்கள்.
8 May 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top