ads



அரசு ஐடிஐ பயிற்சி அலுவலர் பணி: ஆன்லைனில் பரிந்துரை பட்டியல் வெளியீடு

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

அரசு ஐடிஐ பயிற்சி அலுவலர் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சண்முகசுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேலைவாய் ப்பு மற்றும் பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவு இணை இயக்குனரால் அறிவிக்கப் பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணி காலியிடங் களுக்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் விவரங்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தால் பரிந்துரை செய்யப்பட உள்ளது.


இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தகுதியுடன் எலெக்ட்ரிஷியன், டர்னர், வயர்மேன், மெக்கானிக், மோட்டார் மெக்கானிக், மெசினிஸ்ட், இன்ஸ்ட்ரு மென்டு மெக்கானிக், பிட்டர், வெல்டர், ஏ.சி. மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டெஸ்க் டாப் பப்ளிசர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் என்.டி.சி, என்.ஏ.சி, முடித்து இருக்க வேண்டும்.


01.07.2013 அன்று தேதியில் பழங்குடி யினர், ஆதிதிராவிடர், அருந்ததியினருக்கு 40 வயது வரையும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், பிற்பட்ட முஸ்லிம்கள் 37 வயதுக்குள்ளும், பொது வகுப்பினருக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகை உண்டு. மாற்றுத் திறனாளி களுக்கு 10 ஆண்டு சலுகை உண்டு. பதிவு மூப்பு விவரம் பாடவாரியாகவும், பரிந் துரைக்கப் படவுள்ள நபர் களின் பட்டியலும் தூத்துக்குடி மாவட்ட ww.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


பதிவு மூப்பு பட்டியலின்படி பதிவு மூப்பு இருந்தும், பரிந்துரைக்கப்படவுள்ள பட்டியலில் இடம்பெறாத நபர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப் பட்ட வேலைவாய்ப்பு அலு வலக அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் 17.01.2014 அன்று தூத்துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : TutyOnline

16 Jan 2014

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top