ads



Nokia [நோக்கியா] செல்போன் நிறுவனத்தை ரூ. 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசாப்ட்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது.
செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன.
மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நோக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சோனி, ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன.
குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ போன் சாப்ட்வேரை நோக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது. இது ஓரளவுக்கு நோக்கியாவுக்கு உதவினாலும், பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை.இந் நிலையில் கடும் நெருக்கடியில் உள்ள நோக்கியாவை வாங்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் போன்ற சாப்ட்வேர் பின்னணியைக் கொண்ட நிறுவனங்களே நேரடியாக போன்களைத் தயாரித்து வெற்றி கண்டதையடுத்து, அதே வேலையில் கூகுள் நிறுவனமும் இறங்கியுள்ளது. விரைவிலேயே கூகுள் போன்கள் உலகளவில் வலம் வரவுள்ளன.இந் நிலையில் அதே ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ள மைக்ரோசாப்ட் இதன் முதல் படியாக உலகின் மாபெரும் செல்போன் நிறுவனமான நோக்கியாவை வாங்க முடிவு செய்துள்ளது.
மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணைவார் என்றும் தெரிகிறது. இவர் மைக்ரோசாப்டில் இருந்து தான் நோக்கியாவுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலையில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரகவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Source: http://tamil.oneindia.in/news/2013/09/03/business-microsoft-buy-nokia-device-business-for-dollar-7-2-billion-182644.html
3 Sep 2013

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top