ads



நமது தொகுதி எம்.எல்.ஏவின் இ.மெயில் முகவரி இது தான்!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ. இப்போது எம்.எல்.ஏக்கள் லேப் டாப் சகிதம் இருப்பதால் கண்டிப்பாக இ.மெயில் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறுகின்றனர்.தமிழக அரசு இ.மெயில் முகவரிதமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் இணைந்து மக்களுடன் நேரடியாக உரையாடி வருகின்றனர்.

நமது தொகுதி எம்.எல்.ஏவின் இ.மெயில் முகவரி : mlatiruchendur@tn.gov.in

அதேபோல் மக்களின் குறைகளை நேரடியாக அறியவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இ.மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு தொகுதி தொடர்பான புகார்களை அளிக்கலாம்.எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு மனு எழுதிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கொள்வதைப் போல இனி இ.மெயிலில் புகார் மனு எழுதியோ, நலத்திட்ட உதவி கோரியோ விண்ணப்பித்து தரலாம்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்களின் நினைவு வரும். ஓட்டுக்கேட்டு வரும் போது தொகுதிப் பக்கம் எட்டிப்பார்ப்பார்கள். இனி இ.மெயில் மூலமாவது தொடர்பில் இருக்கிறாரே எம்.எல்.ஏ என்று சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

பொதுமக்களின் " நியாமான " கோரிக்கைகளை பார்த்து பதில் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம். எனவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள். எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

Source : http://tamil.oneindia.in/news/2013/03/25/tamilnadu-know-your-mla-s-e-mail-id-172121.html

25 Mar 2013

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top