ads



வாக்காளர் பட்டியலில் சேர அக். 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
வாக்காளர் பட்டியில் பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய  அக். 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் 1.1.2013-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அக். 1 முதல் அக். 31 வரை தேர்தல் வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, பெயர் திருத்தம் மற்றும் முகவரி திருத்தங்களுக்கு படிவம் 6, 7, 8 மற்றும் 8 ஏ-களில் நிரம்பி மனு விண்ணப்பிக்கலாம்.

1.1.2013 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க மனு அளிக்கலாம். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து மற்றொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு குடிபெயர்ந்துள்ள பெயர் சேர்ப்பதற்கும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

பெயர், புகைப்படம் மாற்றம் மற்றும் இதர விவரங்களில் திருத்தம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் இடம் மாறியிருந்தால் புதிதாக குடிபெயர்ந்துள்ள பகுதியில் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிய படிவம் 8ஏ பூர்த்தி செய்ய வேண்டும்.  

படிவம் 6 மூலம் புதிதாக பெயரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் 18-24 வயதுக்கு உள்பட்டவர்கள் கண்டிப்பாக வயதுக்கான ஆதாரம் மற்றும் குடியிருக்கும் ஆதாரத்தோடு இணைத்து மனு அளிக்க வேண்டும். அக். 7, 14, 21ம் தேதி ஆகிய 3 தினங்கள் வாக்காளர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் 
 
Source : TutyOnline 
2 Oct 2012

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top