ads



வடகிழக்கு மாநிலத்தவர் விவகாரம்: 8 மாநிலங்களில் டிவிட்டருக்கு தடை விதிக்கிறது மத்திய அரசு?

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களில் டிவிட்டர் இணையளதளத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

twitter-logo.jpgவடகிழக்கு மாநில மக்கள் இடையே கடந்த மாதம் வதந்தியை கிளப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.

கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் இந்த வதந்தி கிளப்பப்பட்டதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இதனையடுத்து இந்த மாநிலங்களில் டிவிட்டர் இணையதளத்தை எப்படி முடக்குவது பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களிடம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை கேட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலத்தவர் இடையே வதந்தியை கிளப்பியதாக இதுவரை 310 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

source : tamil.oneindia.in

10 Sep 2012

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.. Says:
Sep 10 2012 8:22PM (IST)

வடகிழக்கு மாநிலத்தவர் இடையே வதந்தியை கிளப்பியதாக இதுவரை 310 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.. அதை போல் நமது நகரமன்ற உறுப்பினர்களின் சிலர் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை குறிப்பிட்டு அது மக்கள் மத்தியில் பொய் செய்தி பரப்புகிறது... என்று குற்றம் சாடும் உறுப்பினர்களின் சிலர் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தகவல் அனுப்பி அந்த இணையதளத்தை முடக்க செய்யலாமே...?

சமீபத்தில் நமது ஊரில் ஒரு இணையதளம் சில சதிகாரர்களால் முடக்க பட்டதாக இந்த இணையதளத்தில் செய்திகள் வந்தது குறிபிடத்தக்கது...

பொய் செய்தி பரப்பும் இணையதளம் எதுவாக இருந்தாலும் முடக்க பட வேண்டும்...




Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top