ads



டேப்லட் சந்தையில் கால் பதிக்கும் மைக்ரோசாஃப்டு!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
சொந்த இயங்குதளத்தில் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாஃப்டு நிறுவனம். விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட இந்த புதிய டேப்லட்டினை எப்போது மைக்ரோசாஃப்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
windows-8-surface-500.jpg
இதை தொடர்ந்து நேற்று சர்ஃபேஸ் என்ற பெயரில் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாஃப்டு நிறுவனம். இதில் 2 விதமான வெர்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோடாஃப்டு. விண்டோஸ் ஆர்டி மற்றும் விண்டோஸ்-8 ப்ரோ என்ற 2 வெர்ஷன்களை அறிமுகம் செய்கிறது மைக்ரோசாஃப்டு நிறுவனம்.
இதில் விண்டோஸ் ஆர்டி வெர்ஷன் வெளியிடப்படும். ஆனால் விண்டோஸ்-8 ப்ரோ வெர்ஷன் 3 மாதத்திற்கு பிறகு தான் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
விண்டோஸ் ஆர்டி மாடல் 676 கிராம் எடையை கொண்ட டேப்லட். இதில் 10.6 இஞ்ச் திரை வசதியினை இந்த டேப்லட் வழங்கும். இதன் மூலம் தகவல்களை துல்லியமாக பார்க்கலாம். இதில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதியினையும் பெறலாம்.
இந்த டேப்லட்டின் வீடியோவினையும் இங்கே பார்க்கலாம்.
இதே விண்டோஸ் ப்ரோ மாடல் 903 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த மாடலும் 10.6 இஞ்ச் திரை வசதியினையே வழங்கும். இதனால் இந்த 2 டேப்லட் மாடல்களும் ஒரே அளவு திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்று கூறலாம். இதில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வசதியினையும் பயன்படுத்தலாம்.
மைக்ரோசாஃப்டின் இந்த 2 டேப்லட்களின் விரிவான தொழில் நுட்பம் மற்றும் விலை விவரமும் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.
19 Jun 2012

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top