ads



தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் 4ஜி வை மேக்ஸ் பிராட் பேன்ட்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடியில் அதிவேக இணைப்புடன் கூடிய 4ஜி வை மேக்ஸ் பிராட் பேன்ட் இணைப்பை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது. 
BSNL_1.jpg
இது குறித்து பிஎஸ்என்எல் பொது மேலாளர் திருநாவுக்கரசு கூறுகையில்: பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களின் பிராட்பேன்ட் சேவை தேவையினை அறிந்து கேபிள் இல்லாமல் சேவை அளிக்க முடியாத இடங்களிலும் தனது சேவையை தடையின்றி வழங்க வைமேக்ஸ் 4ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரம், முத்தையாபுரம் மற்றும் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, மெஞ்ஞாணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் டவர்களில் 4ஜி வை மேக்ஸ் பிராட் பேன்ட் சேவைக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

இதன் 4ஜி வை மேக்ஸ் பிராட் பேன்ட் வேகம் 2 எம்பி பிஎஸ் வரை உள்ளது. 220 ரூபாய் முaதல் மாதத்திட்டங்கள் துவங்குகிறது. ரூ.750 மாதக்கட்டத்தில் வீட்டுக்கு அன்லிமிடெட் டவுன்லோடு திட்டமும் உள்ளது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. முன்பதிவிற்கு மாவட்ட தொலை தொடர்பு அலுவலகத்தை அனுகலாம் என்றார். 
News Source : TutyOnline
31 Oct 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top