ads



தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் புகார் தெரிவிக்கலாம்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக தேர்தல் தொடர்பான குற்றங்கள் நிகழ்ந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிப்பதற்காக 2 தொலைபேசி எண்களை எஸ்.பி.நரேந்திரநாயர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 17ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்து வாபஸ் பெறப்பட்டு சின்னங்கள் நேற்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கிவிடும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடத்துவதற்கு எஸ்.பி.,நரேந்திரநாயர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்காக எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரம் செயல்பட்டு வருவதால் எந்த நேரமும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் 0461-2340392, செல்போன் எண் 9487501141 இரு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்கள் மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான முறைகேடுகள், அசம்பாவிதங்கள் குறித்து புகார் கொடுக்கலாம்.
News Source : Dinamalar
4 Oct 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top