ads



உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
29-election-commission300.jpg
மொத்தம் உள்ள 1,32,401 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மிகப் பெரிய போட்டி நிலவுகிறது. நேற்று மாலை வரை 2,62,634 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சம் பேர் அமாவாசை தினத்தன்று மனுத் தாக்கல் செய்தவர்கள் ஆவர். இன்று மாலையுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 31 மாவட்ட ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளும் உள்ளன. இதில் திருச்சி மாநகராட்சி நீங்கலாக மற்ற மாநகராட்சிகளுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

22ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் ஆரம்பத்தில் மிகவும் மந்தமாக இருந்தது. ஆனால் போகப் போக விறுவிறுப்படைந்தது. இந்த முறை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறுவதால்மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மா.சுப்ரமணியன், சைதை துரைசாமி உள்பட 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 200 வார்டுகளுக்கு 1019 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 30ம் தேதியான நாளை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் அக்டோபர் 3ம் தேதிதக்குள் அதைச் செய்ய வேண்டும். அன்று மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். சின்னங்களும் ஒதுக்கப்படும்.
 
NewsSource : Thatstamil.oneindia.in 
29 Sep 2011

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
SEYED Says:
Oct 3 2011 3:40PM (IST)

All the people of kayalpatanam know's Aabitha'S talent Very Well.

Social service is not new for aabitha. Just Look at the past Day's

But now i-Kiya-peravi has Ego Problem. we dont know in what basis

they are supporting Mymunath misiriya. i-Kiya-peravi Should select the

Real talent. Now This is not the Time For ego. But We are Sure

with out i-Kiya-peravi Support (INSHA ALLAH) abitha will win. Then the

people of i-Kiya-peravi Will get shame Hereafter they will not get Respect

This will be the last involvement of i-Kiya-peravi

congratulations Aabitha "ALLAH KNOW'S THE BEST"

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top