ads



காயல்பட்டினம் நகராட்சியின் வார்டுகளை அதிகப்படுத்தும்படி இளைஞர் ஐக்கிய முன்னணி தேர்தல் ஆணையகத்திற்கு மனு.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

காயல்பட்டினம் நகராட்சியில் 18 வார்டுகளே உள்ளன. இதனை அதிகப்படுத்தும்படி நமதூர் சி-கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி அமைப்பு சார்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையகருக்கு மனு அளிக்கப்பட்டது. அம்மனுவின் தெரிவிக்கப்பட்டதாவது :-

பெறுநர்,
உயர்திரு. தமிழ்நாடு தேர்தல் ஆணையர்,
208/2, ஜவஹர்லால் நேரு சாலை,
அரும்பாக்கம்,
சென்னை - 106

பொருள் :- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டினம் நகராட்சி வார்டுகளை அதிகரித்து தேர்தல் நடத்தவேண்டி.

மரியாதைமிகு தேர்தல் ஆணையர் அவர்களுக்கு வணக்கம்.

முக்கியம் எமது காயல்பட்டினம் நகராட்சியில் நீண்டநாட்களாக 18 வார்டுகளே உள்ளன. நகராட்சி வாக்காளர்கள் 28,800 ஆகும். (1,200 ஓட்டுகளுக்க ஓர் வார்டு என) அரசு கணக்கீட்டின்படி 18 X 1200 = 21,600 ஓட்டுகள் கணக்கில் வருகின்றது. 7,200 ஓட்டுகள் அதிகமாக உள்ளன. அதிக மக்கள் தொகை, வாக்காளர்கள் உள்ள எமது காயல்பட்டினத்தில் இன்னும் அதிக வார்டுகளை கணக்கீடு செய்து தேர்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மிக்க அன்புடன் அருள் கூர்ந்துவிழைகிறோம்.

தற்போது நமது நாட்டின் தேர்தல் துறை மிகச்சிறப்பாக குறையில்லாமல், கட்டுப்பாடுடன் நடைபெறுவதை எண்ணி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.

                          நன்றி                                              இவண்.

                                                            இளைஞர் ஐக்கிய முன்னணி,                     

                                                            சி-கஸ்டம்ஸ் சாலை,

                                                            காயல்பட்டினம்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அம்மனுவிற்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனுப்பிய பதில் பின்வருமாறு :-

பெறுநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநர்,
சேப்பாக்கம்,
சென்னை - 5

அய்யா,

பொருள் : முறையீடு - தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் நகராட்சி - வார்டுகளை அதிகரிப்பது தொடர்பாக.

பார்வை  : செயலாளர், இளைஞர் ஐக்கிய முன்னணி, கடல் சுங்கச்சாவடி சாலை, காயல்பட்டினம் - 628204, தூத்துக்குடி மாவட்டம் என்பவரது விண்ணப்பம் நாள் 13.07.2011

பார்வையில் காணும் கடிதம் தக்க நடவடிக்கைக்காக அசலாக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

இணைப்பு - மேற்கண்டவாறு.

                                                                      தங்கள் நம்பிக்கையுள்ள,

                                                                       (ஓம்) பெ.குபேந்திரன்,

                                                                          செயலாளருக்காக

நகல் :
செயலாளர்,
இளைஞர் ஐக்கிய முன்னணி,
கடல் சுங்கச்சாவடி சாலை,
காயல்பட்டினம் - 628204,
தூத்துக்குடி மாவட்டம்.

இவ்வாறு அந்த பதில் கடிதத்தில் நடவடிக்கை எடுக்கும்மாறு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைப்பதை தெரியபடுத்தியுள்ளது.

9 Aug 2011

வாசகர்கள் கருத்து

5 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
M Sajith Says:
Sep 20 2011 5:32PM (IST)

நல்ல முயற்சி - வாழ்த்துக்கள்.

'ஆணையர் அவர்களுக்கு' என்று இனிவரும் காலங்களின் நிறுத்தி கொள்ளலாம். வணக்கமும் வேண்டாம் வம்பும் வேண்டாம்.

நல்லதையும் சரி இல்லாததையும் ஒருசேர சுட்டி காட்டும் Constructive Criticisms செய்யவும் அதனை புரிந்து செயல்படவும் இறைவன் நமக்கு துணை செய்யட்டும்.

S.A.Muhammad Ali Says:
Aug 12 2011 10:12PM (IST)

வனக்கம் என்ற சொல்லுக்கு Hello என்ற அர்த்தமும் உண்டு. தப்பு கண்டு பிடிக்கிற‌தில் குறியாக இருப்பவர்கள் அதில் உள்ள நல்ல விசயத்தை பார்க்க மாட்டார்கள்.

Best wishes to Y.U.F.
உங்கள் சமூக பனி தொடர வாழ்த்துக்கள்.

Ahmed Says:
Aug 10 2011 5:49AM (IST)

இது ஷிர்க் என்று எழுதி உள்ளீர்கள் நடைமுறை பழக்கம் என்று நினைத்து அவர்கள் எழுதி இருக்கலாம், இது கவனக்குறைவாக இருக்கும் அவர்கள் திருதிகொல்வார்கள்.
Beat around the bush தவிர்த்து பார்த்தல் உங்கள் விளக்கம் அழகாக இருந்தது. mordereator இன் கத்திரிக்கு ஏதோ ஒரு byepass வைத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

T.M.RAHMATHULLAH (72) Says:
Aug 9 2011 9:25PM (IST)


லா இலாஹ இல்லல்லாஹ் எனும் திருக்கலிமா தையிபா வின் சிறு விளக்கம்.
மரியாதைமிகு தேர்தல் ஆணையர் அவர்களுக்கு வணக்கம்.
செயலாளர்,
இளைஞர் ஐக்கிய முன்னணி,
===============================================
kayalaan@gmail.com Says:
Aug 10 2011 5:50AM (IST)

இளைஞர் ஐக்கிய முன்னணி தேர்தல் ஆணையருக்கு வணக்கம் தெரிவப்பது தவறானது. அவர்கள் உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும்
-----------------------------------------------
இந்தமாதிரி அறியாத்தனமாக் நம்மில் அநேகர் எழுதுவது,பேசுவது வழக்கமாகி விட்டது. இதற்குத்தான் சின்ன ஷிற்க்கு, ஷிற்க்குன் ஃகஃபியுன் என அற‌பிய்யில் கூறுவார்கள்- இந்த வார்த்தையின் உபயோகம் அல்லஹ்வைத்தவிர மற்றவற்றிற்க்கு உபயோகிப்பதை தவிர்க்கப்பட வேண்டியதே. ஆனால் கவி களில் கையாளப்படும் முறைகளுக்கு இதனை பொறுட் படுத்துவ தில்லை, லா இலாஹ இல்லல்லாஹ் .எனும் இந்த‌ திருக் கலிமா தையிபாவின் வெளி அர்த்தம் ,உள் அர்த்தம் எல்லாம் விவரமாக தெரிய வேண்டியது மட்டுமில்லை ஏழு வயதாகி விட்டாலே கட்டாயமாக விளங்கி இருக்க வேண்டும்.இத்ற்க்கும் நான்கு ஷற்த்துக்கள்=நிபந்தனைகள்= உண்டும். ஷிற்க்குண் கபீற் எனும் பெரிய ஷிற்குக்குதான் தவ்பா செய்யாதவரை மன்னிக்கப்பட மட்டாது. இதன் கூலி நரக்மே என உலமாக்கள் கூறுவார்கள்.
சொல்லப்பட்ட வணக்கம் என்றால் என்ன என்றாவது குறைந்த அளவு விவரம் தெரிய வேண்டும்
வணக்கத்துக்குரிய‌ நாயன் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர எனும் கலிமா தையிபா வின் தமிழ் சுலோகமெல்லாம் ஏழு வயதிற்க்குள் தான்.
இதற்க்குமேல் எழுத இவ்விடம் பொருத்தம் இல்லை உலமாக்களிடம் நேரில் கண்ணியம் செய்து கேட்கவும்
41:33 وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا
مِنَ الْمُسْلِمِين وَقَالَ إِنَّنِي
41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
நாம் இவ்விதம் இருக்க வேண்டாமா? னாம் ஒருமுஸ்லிம் என்று சொல்லும் நாம் சிந்திக்கவேண்டும்.வஸ்ஸலாம்/தைக்கா றஹ்மத்துல்லாஹ்/காயல்

kayalaan@gmail.com Says:
Aug 9 2011 4:50PM (IST)

இளைஞர் ஐக்கிய முன்னணி தேர்தல் ஆணையருக்கு வணக்கம் தெரிவப்பது தவறானது. அவர்கள் உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top