adsஇன்ஷாஅல்லாஹ் விரைவில் காயல்டுடே டிவி ஆரம்பமாகிறது.

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நமதூர், நம்நாடு மற்றும் நம்சமுதாயத்தின் செய்திகளை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நம்காயலர்களுக்கு சுடச்சுட தந்துகொண்டிருந்த நமது இணையதளம் நம்நாட்டின் வேறு எந்த ஊடகமும் செய்திராத புதிய முயற்சியான நேரடி ஒளிபரப்பு சேவையை துவங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

இந்த சேவையை நமது இணையதளம் வெளிநாடுகளில் தங்கள் குடும்பங்களை, நண்பர்களை பிரிந்து வாழும் நம்மவர்களுக்காக அவர்கள் இல்லங்கள், நமதூரில் நடைபெறும் விஷேச வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை காண முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்குவதற்காகவே துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் நமது இணையதளம் எடுத்த முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது.

இந்த நேரடி ஒளிபரப்பு சேவையை தொடரும்படி நமது காயல்டுடேயின் பெரும்பாலான வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நமது இணையதளம் இன்ஷாஅல்லாஹ் மிகவிரைவில் நேரடி ஒளிபரப்பு தொலைகாட்சி ஒன்றினை நமது இணையதளத்தில் துவங்கவிருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது நாள்வரை எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்துவரும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்கல்லாஹ்ஹைரா. தொடர்ந்து உங்களிடம் ஆதரவை நாடுகிறோம்.

14 Jul 2011

வாசகர்கள் கருத்து

7 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Abulhasan , Saudi arabia Says:
Jul 16 2011 5:29AM (IST)

Keep up good work. All the best

kahir Says:
Jul 16 2011 2:06AM (IST)

Best wishes to KTN team.

முத்துவாப்பா.. Says:
Jul 15 2011 10:33PM (IST)

ஆஹா மிகவும் அருமையான செய்தி, KTN நேரடி ஒளிபரப்பின் மூலம் தான் நாங்கள் ஊரில் இல்லாத குறையை தீர்த்துக் கொள்கிறோம். மிக்க நன்றி, KTN இன்னும் மெம்மேலும் வளர வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்கிறேன்

T.M.RAHMATHULLAH (72) Says:
Jul 15 2011 7:43PM (IST)

KTN தொலைக்காட்சி ஒளிபரப்பு விரைவில் வெளிவர ஆர்வமுடன் உள்ளோம்.அன்றும்,இன்றும்,என்றும் த‌ரமே .என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்குண்டு.வாழ்த்துகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹூ ! ! ! .
அன்பு KTN TV நிலையத்தார்களே !நீங்கள் செய்யும் இந்த சேவை சும்ம சாமானியமானதல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும்,ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் செய்யக்கூடிய மகத்தான யுனிவர்ஸல் சேவை என்றால் அது மிகை ஆகாது. அது மட்டுமல்ல. இம்மை மறுமை ஆகிய இருலோக வாழ்விற்கும் பிரயோஜனம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
எனெனில் எந்த (அமலை) காரியத்தை. எந்த நேரத்தில், எப்படி செய்தால் அல்லாஹ் பொருந்துவானோ - கண்மணியான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக்க விரும்புவார்களோ அந்தக்காரியத்தை நாமும் விரும்பிச் செய்வதும், செய்விப்பதும் {எத்தி வைப்பதும்} தான் இருலோக மேலான வாழ்வை நமக்கு பெற்றுத்தரக்கூடியதாக இருக்கிறது. அந்த முறைப்படி இந்த KTN TVமூலம் யுனிவர்ஸல் மக்களும் பயனடைவார்கள் என நம்பி துஆ செய்கிறேன். அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக, ஆமீன்!
T.M.Rahmaththullaah, Aroosiyaa Hadheethu Majlis. 59, Deevu Street, Kayalpatnam. Phn 280852

OmeranasVMA.Qatar. Says:
Jul 14 2011 3:41PM (IST)

KTN தொலைக்காட்சி ஒளிபரப்பு விரைவில் வெளிவர ஆர்வமுடன் உள்ளோம்.அன்றும்,இன்றும்,என்றும் த்ரமே KTN வாக்கு.இது பாக்கு விளம்பரம் அல்ல.என்றும் எங்கள் ஆதரவு உங்களுக்குண்டு.வாழ்த்துகிறோம்.

Habib Mohamed Says:
Jul 14 2011 12:05PM (IST)

Best wishes to KTN team to get success in all level of field works. We all are ready to support you in all level

Mohamed Adam Sultan Says:
Jul 14 2011 9:42AM (IST)

காயல் டுடய் இன் தொன்டு தொய்வின்ரி தொடர வல்ல இனறவனை வேண்டுகிறேன்.என் நடுனிலையான ஆதரவு என்ரும் தொடரும்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top