adsதொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்...!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
1000.jpg
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.

புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.

வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.

உலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய எத்தனையோ தலைவர்கள் தங்கள் பொழுது போக்காக எதையும் நினைக்கவில்லை வாழ்க்கை வழிமுறையாக அனைத்தையும் நினைத்து அதன் படி தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைக் கூட வெற்றிப் பாதையின் வழிகாட்டிகளாகப் பயண்படுத்திக் கொண்டார்கள்.

உலகின் வெற்றிப் பாதையில் யாரும் காண முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு நேர் வழி காட்டி உலகின் கேடு கெட்ட சமுதாயமாக இருந்தவர்களை மனிதப் புனிதர்களாக மாற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த ஓய்வு நேரம் அதனைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி மிக அழகான முறையில் ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறார்கள்....

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.  1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம்.                                    (புகாரி 6412)

ஓய்வு நேரத்தைப் பயண்படுத்துவதின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த அளவுக்கு தெளிவாக எந்த மனிதரும் சொல்லியிருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.

உலகை ஒரு பொழுதைக் கழிக்கும் காட்சியறையாக நினைத்து வாழும் இன்றைய நவீன மனிதர்கள் தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை வீன் கேளிக்கைகளுக்காகவே செலவு செய்கிறார்கள். அதிலும் அதிகமானவர்கள் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகின் வழிகாட்டியான இஸ்லாம் தொலைக்காட்சிப் பெட்டி என்ற இந்த அரிய கண்டு பிடிப்புக்கு மற்ற மார்க்கங்கள் கொடுக்காத ஒரு முக்கிய முன்னுரிமையைக் கொடுக்கிறது. பிரயோஜனமான செய்திகள், கருத்துக்கள், ஆரோக்கியமான தகவல்கள் என்று சிறந்த பல செய்திகள் அதில் ஒளி, ஒலி பரப்பப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை இஸ்லாம் எந்த நேரத்திலும் தடை செய்யவில்லை.

ஆனால் இன்று நாம் நமது சமுதாயத்திற்கும், நமக்கும் எது ஆரோக்கியமான செய்தியோ அதைத் தவிர்த்து விட்டு அதுவல்லாத மற்ற அனைத்து விஷயங்களுக்காகவும் நமது நேரத்தை வீனாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி வீனான தொலைக் காட்சித் தொடர்கள், சினிமாக் கூத்தாட்டங்கள் பாடல் காட்சிகள், வக்கிர நடனங்கள், ஆபாசப் பேச்சுக்கள், கபடம் நிறைந்த வார்தைகள் என்பவற்றைப் பார்ப்பதினால் நமது வாழ்வில் நமது எண்ணத்தில், நடை முறையில் பல்வேறான கெட்ட சிந்தனைகள், நடவடிக்கைகள் தோற்றம் பெருவதை இன்றை நவீன உலக ஆராய்ச்சிகள் தினமும் நிரூபிக்கின்றன.

தொலைக் காட்சி பார்ப்பதின் நமக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள்.


தொலைக் காட்சிக் கதையும், தனிமை போன்ற உணர்வும்.  

சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும், படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் சிக்குண்டு இருப்பது போல காட்டுவார்கள். அத்துடன் வாழ்க்கையில் வெற்றிபெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள்.

படமாக இருந்ததால் 02 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது போல காட்டுவார்கள்.

இவ்வாறான படங்களயும், நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக, நடிகைககளை ரோல் மாடல்களாக நினைத்துப் பின்பற்றி இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள். காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் அல்லது விளையாட்டுப் பொருட்களுன் பேசிப் பேசி காலத்தைக் கழிக்கும் அவல நிலையில் தள்ளப்படுகிறார்கள்.

நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் முரட்டுத்தனம்.


தொலைக் காட்சிகளினால் நமக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கிய இடத்தை பெருவது முரட்டுத் தன்மையாகும். சினிமாப் படங்களில், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைக் காட்சிகள், கொலைகள் போன்றவற்றைப் பார்ப்பதினால் சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் முரட்டுக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து சினிமாவின் காட்சி நிஜ வாழ்க்கையின் வரையரையாக மாறிவிடுகிறது.

ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200000  சண்டை காட்சிகளையும், 50000 கொலைகளையும்  தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்திய கூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 1- 3மணித்தியாலங்கள் வரை தொலைகாட்சி பார்க்கும், 22 .5 % ஆன  சிறுவர்கள் தனது சக தோழர்களுடன், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

05 மணித்தியாலங்களிற்குமேல் பார்க்கும்போது  இந்த 22.5 % என்பது 28.8 % க்கு உயர்வடைகிறது. இருந்தாலும்01 மணித்தியாலத்திற்கும்  குறைவாகதொலைகாட்சி பார்க்கும் 5.7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். வீடுகளில் பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் சண்டைகளும் இதற்கு ஒரு காரணியாகச் சொல்லப்படுவது மேலதிக தகவல்.

செயல்பாடுகளில் சரியான கவணம் செலுத்த முடியாமை.

சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சிகளும், சிறுவர் நிகழ்சிகளும் மிகவும் வேகமாக இடம் பிடித்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்ப்ப்படும் போது  நிறங்கள் அதிகமானதாகவும், மிகவும் வெளிச்சம் அதிமானதாகவும் காட்டப்படும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த தொலைக் காட்சிகளின் ஒளி பரப்பு வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள்.

இதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது அந்தப் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணமும், சுறுங்கிய கவனமும் மாணவர்கள் மத்தியில் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.  சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

டி.வி. பார்த்தல் கேம்கள் விளையாடுதல் போன்றவை பற்றிய ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணி நேரங்கள்  சிறுவர்களுக்கு TV பார்க்கவும், கேம்ஸ்களை விளையாடவும் கொடுத்து பரிசீலனை செய்த போது சிறிது  நாட்களின் பின்னர் குறிப்பிட்ட சிறார்கள் பாடங்களில் கவணம் செலுத்த சிறமப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
 
கனவில் கூட இன்பம் இல்லை.

50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி   இதாம் காணும் கனவுகளை பற்றிய செய்திகளை குறித்து வைக்ககூறி உள்ளார்கள். (இவர்களில்பாதிபேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், பாதிபேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இறுதியில் தாம் கண்ட கணவுகள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஊட்டியது.

இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேகமானோர்  கண்ட கனவுகள் பல  வண்ணநிறங்களாக  தோன்றிஉள்ளது. 55 வயதுக்குமேற்பட்டவர்களில் அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் தெரிந்துள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அறியாத வயதும் தெரியாமல் செய்யும் தவறும்.

தங்கள் குழந்தைகள் கொஞ்சம் எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் சேட்டைகள், குறும்புத் தனங்களும் கூடவே சேர்ந்து ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும். தாய் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக தனது குழந்தைக்கு தொலைக் காட்டியை போட்டுக் காட்சிப்படுத்துகிறாள்.

பொம்மைப் படங்கள், சிறுவர் நடணங்கள், பேய்களின் (?) பெயரால் உருவாக்கப்படும் கதைகள் என்று தொடங்கி கட்டியணைத்து குத்தாட்டம் போடும் சினிமாப் பாடல்கள் வரை அந்தக் குழந்தைக் குறைவின்றி பார்த்து ரசிக்கும் நிலையை தாயே தாரைவார்த்துக் கொடுக்கிறாள். இதனால் தனது குழந்தையின் வாழ்வில் எதிர்காலத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது? என்ன விபரீத்த்தைக் குழந்தை அடைந்து கொள்ளப் போகிறது என்பதை தாய் சிந்திக்க மறுக்கிறாள்.

குழந்தை அறியாத வயதில் தெரியமால் செய்யும் தவறுக்கு துணை நிற்கும் தாயின் செயல்பாட்டால் பிள்ளையின் கவணம் திசை திருப்பப்பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் பிள்ளையின் சிந்தனை கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது.

பிறந்து 29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது, அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் பாடங்களில் குறைவான  மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதுடன்,  வகுப்பறைகளில்  சுறுசுறுப்பு அற்றுப் போய் சோம்பேரித் தனத்துடன் காணப்படுகிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது மேலதிக தகவல்.

தொலைக் காட்சி ரசனையும், உடல் பருமனும்.

எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் தொடர்நது தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பவர்களுக்கு உடலில பெருகும் கலோரிகள் நிலை பெற்று உடல் பருமன் அசுர வேகத்தில் பெருக ஆரம்பிப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நடத்தப்பட்ட ஆராச்சியில் தொலைக் காட்சியை குறைவாக பார்த்தவர்கள் தினம் 5 மணி நேரங்கள் வரை பார்த்தவர்களை விட 120 கலோரிகளை தங்கள் உடம்பில் இருந்து இல்லாமலாக்குகிறார்கள். 

தினமும் 5 மணி நேரங்கள் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு 120 கலோரிகள் கொழுப்பை தங்கள் உடம்பில் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.

அன்பின் சகோதரர்களே ! தாய் மார்களே ! பெற்றோர்களே !
சினிமாவின் சீர் கேட்டைத் தவிர்ப்போம். தொல்லைக் காட்சியான தொலைக் காட்டியை நல்லதுக்கு மாத்திரம் பயண்படுத்துவோம். என்ற கோரிக்கையை அன்பாக உங்களிடம் முன்வைக்கிறோம்.

தகவல்:
அரபி ஷுஅய்ப்.

 

12 Jul 2011

வாசகர்கள் கருத்து

6 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
OmeranasVMA.Qatar Says:
Jul 13 2011 11:40AM (IST)

நான் பொதுவாச்சொன்னதை எனக்கே திருப்பி விட்டுட்டாயே தைக்கா.நான் ஒழுங்கா ஒருவேளை சாப்பாடு சாப்பிடுறது உனக்கு பிடிக்களையா??

AbdulKader ThaikaSahib MSS Says:
Jul 12 2011 10:24PM (IST)

ஸுஐபு மாமா அவர்களின் கட்டுரை மிக அருமை.
சகோ. உமர் அவர்களின் ஆதங்கம் "அப்பத்தான் இருட்டிலாவது சாப்பாடு கிடைக்கும்"
ரொம்ப அடிபட்டிருகிறார் என்று நினைக்கிறன்.
அன்று நம் பெற்றோர்கள் நிலாவை காட்டி, சோறு ஊட்டினார்கள்,
ஆனால் இன்று டிவிய பார்த்து பட்டினி போடுகின்றனர்.

uduman Says:
Jul 12 2011 10:12PM (IST)

30 வருடதீர்கு முன்னால் நிலா எனறு வரும்.இப்பகேட்டால் sun(Tv)என்று தெளிவாக வரும்

Habeeb Says:
Jul 12 2011 9:34PM (IST)

Best wishes for these kind of practical news

OmeranasVMA.Qatar. Says:
Jul 12 2011 3:18PM (IST)

அரபி ஷுஹைப்,சொன்னதெல்லாம் முத்தான வார்த்தைகள்தான்.சந்தேகமில்லை,சகோ.ஸுஃபி.ஆனா நம்ம வீட்ல சொன்னா கேப்பாங்களா,பட்டினி போடுவாங்களான்டுதான் தெரியல.இனி கரண்ட் கட்டுன்னா,மதியம்,1டு2.இரவு 8டு10ன்னு ஆக்க சொல்லனும்.அப்பத்தான் இருட்டிலாவது சாப்பாடு கிடைக்கும்.30,40,வருடம் முன்பு உலகத்தில் மனிதர்கள் எதனை அதிகமாக பார்க்கின்றார்கள் என்றால்,நிலா எனறு வரும்.இப்பகேட்டால்,Tvஎன்று தெளிவாக வரும் பதில்.காரணம் அன்று நம் பெற்றோர்கள் நிலாவைக்காட்டி சோறுட்டினாள்.இன்றோ???.அவர்களாக திருந்தினால் ம‌ட்டுமே முடியும்.

Soofi Says:
Jul 12 2011 2:26AM (IST)

அன்பானவர்களே ஒரு அருமையான தலயங்கத்தை நம் தோழர் ஷுயபு அவர்கள் தந்திருக்கிறார்கள். அதை பெற்றோர்களும், அருமையான குழந்தைகளும் மற்றும் இளைஞர்களும் கேட்டு நடந்தால் நமக்கு இனி வெற்றிதான், நடப்போமா இன்ஷா அல்லாஹ்.

நன்றி

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top