ads



தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்கள் செலவு பட்டியல்: அனிதா ராதாகிருஷ்ணன் இரண்டாவது இடம்

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கு செலவு செய்ததில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி முதல் இடத்தை பிடித்துள்ளா. விளாத்திகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள்சாமி குறைந்த தொகை செலவழித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்.13ம் தேதி நடந்தது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஜூன் 13ம் தேதிக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தலுக்கு செலவு செய்த தொகையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்த படியாக திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் கூடுதல் தொகை செலவு செய்துள்ளார். மிகவும் குறைவாக செலவு செய்தவர் விளாத்திகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பெருமாள்சாமி தான். 

ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்த தொகை விவரம் வருமாறு:

தூத்துக்குடி:

செல்லப்பாண்டியன் (அதிமுக) 11,02,983 
கீதாஜீவன் (திமுக) 12,27,264

ஸ்ரீவைகுண்டம்:

சண்முகநாதன் (அதிமுக) 9,19,987 
சுடலையாண்டி (காங்) 11,73,138

திருச்செந்தூர்:

அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) 15,04,490 
மனோகரன் (அதிமுக) 10,34,956

ஓட்டப்பிடாரம்:

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) 15,35,993 
ராஜா (திமுக) 14,77,100

விளாத்திகுளம்:

மார்க்கண்டேயன் (அதிமுக) 9,91,115 
பெருமாள்சாமி (காங்.) 6,46,217.50

கோவில்பட்டி:

கடம்பூர் ராஜூ (அதிமுக) 10,71,055 
ராமச்சந்திரன் (பாமக) 13,55,644
 
News Source : TutyOnline

23 Jun 2011

வாசகர்கள் கருத்து

0 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top