தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (01/04/2022) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ITI மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் இம்முகாமில் பங்குபெறலாம்.
இம்முகாம் குறித்த மேலதிக விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் கருத்து