
இளையான்குடி ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்ட குழுவின் சார்பாக 9 நபர்கள் பங்கேற்கும்113ஆம் ஆண்டு கால்பந்து போட்டி கடந்த 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அலங்காரத்தோப்பு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற காயல்பட்டினம் United Sports Club அணியினர் தங்களது முதல் சுற்று போட்டியில் திருச்சி TURF 45 FC அணியினரை சமநிலை முறிவு முறையில் வெற்றிபெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர். கால்இறுதி போட்டியில் தேனி விவேகானந்தா அணியினரை 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் கோட்டையூர் ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் அணியினரை 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (27/03/2022) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராம்நாடு ரத்னா புல்டர்ஸ் அணியினரை சந்தித்த USC அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கோப்பை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசினை தட்டிச்சென்றனர்.
வாசகர்கள் கருத்து