
காயல்பட்டினம் நகராட்சியின் முதலாவது மாத சாதாரண கூட்டம் நேற்று (17/03/2022) நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் K.A.S. முத்து முஹம்மது தலைமை தாங்கினார், துணைத்தலைவர் Z.A. சுல்தான் லெப்பை மற்றும் நகராட்சி ஆணையர் முன்னிலை வகித்தார்கள்.
நகராட்சியின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, நகரின் வார்டுகளின் மறுவரையரை செய்து வார்டு எண்ணிக்கையை உயர்த்துவது உட்பட, மழைக்காலங்களில் மழைநீர் தெருக்களில் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் அமைப்பது, ஒருவழிப்பாதையை முறையாக கடைபிடிப்பது உள்ளிட்ட சுமார் 25 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நகர்மன்றத் தலைவர் முத்து முஹம்மத் ஆலீம் மஹ்ழரி அவர்களின் களப்பணி சிறந்தது...!!!மென்மேலும் சிறக்க நல் வாழ்த்துக்கள்..
அன்புடன் : காயல் ஜெஸ்முதீன்