சொளுக்கார் தெருவைச் சேர்ந்த நஹ்வீ அல்ஹாஜ்ஜா S A. செய்யித் ராபியா என்ற சேராய்த்துமா அவர்கள் இன்று (18/03/2022) காலை 11 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார், மர்ஹூம் நஹ்வீ ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ அவர்களின் மருமகளாரும், சிறிய குத்பா பள்ளியின் முன்னாள் கத்தீப் மர்ஹூம் ஹாஃபிழ் நஹ்வீ முஹம்மத் முஹ்யித்தீன் ஆலிம் அவர்களின் மனைவியும், ஹாஜிகளான மர்ஹூம் ஹாஃபிழ் நஹ்வீ செய்யித் அப்துல் காதிர், மர்ஹூம் நஹ்வீ முஹம்மத் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், கடைப்பள்ளி இமாம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நஹ்வீ M.M. முஹம்மத் இஸ்மாஈல், அல்ஹாஜ் நஹ்வீ M.M.செய்யிது சதக்கத்துல்லாஹ் (ரியாத்-KSA), முஹ்யித்தீன் பள்ளி இமாம் அல்ஹாஜ் நஹ்வீ M.M. முத்துவாப்பா ஆகியோரின் தாயாரும், ஹாஜிகளான M. அஹ்மத் ஃபுஆத், ஊசி S.H. பாதுல் அஸ்ஹப், கம்பல் பக்ஷ் S.H. மொகுதூம் முஹம்மத், குளம் S.H. ஷெய்கு அப்துல் காதிர் ஆகியோரின் மாமியாரும், சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் ஹாஃபிழ் நஹ்வீ S.A.K. முஹம்மத் முஹ்யித்தீன் ஆலிம் அவர்களின் மாமியும், மர்ஹூம் A.F. முஹம்மத் இப்ராஹீம், B.A. ஷாஹுல் ஹமீத், B.A. முஹம்மத் முஹ்யித்தீன், கம்பல் M.M. ஷாஹுல் ஹமீத், குளம் S.A.C. ஷெய்கு ஹுஸைன் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (18/03/2022) இரவு 11 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வாசகர்கள் கருத்து