தமிழக முதல்வர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதும் திருச்செந்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் திருச்செந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு கழக பொறுப்பளாரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறையின் அமைச்சருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகின்ற 20ஆம் தேதி மினி மாரத்தான் போட்டியை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இந்த போட்டி திருச்செந்தூரில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பில் இருந்து 20ஆம் தேதி காலை துவங்குகிறது. வீரபாண்டியபட்டணம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், ஓடக்கரை வழியாக மீண்டும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அலுவலகம் முன்பு முடிவடையும்.
ஆண், பெண் என இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெற உள்ள இப்போட்டி ஆண்களுக்கு 16 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 8 கிலோமீட்டர் தூரமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.35 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.25 ஆயிரம், நான்காவது இடம் பிடிப்பவருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஆறுதல் பரிசாக 10 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
பெண்களில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.30 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.20 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம், நான்காவது இடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ஆறுதல் பரிசாக 10 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற 19ஆம் தேதிக்குள் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தங்களது பெயர்களை பதிவுசெய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வாசகர்கள் கருத்து