
காயல்பட்டினம் நகராட்சியின் 11வது வார்டு உறுப்பினர் ஆசியா ஃபஹ்மிதா அவர்கள் தனது வார்டுக்குற்பட்ட தைக்கா ஸ்கூல் என்றழைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளியின் பழைய கட்டிடம் அமைந்த பகுதியை நகராட்சி தலைவர், ஆணையர், பொறியாளர், சுகாதார ஆய்வாளர்களுடன் பார்வையிட்டார்.

இந்த பகுதியை உடனடியாக தூய்மைபடுத்தி விஷ ஜந்துக்களின் தொல்லையிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று 11வது வார்டு உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.
நகர்மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் இந்த வார இறுதிக்குள் இப்பகுதி தூய்மைபடுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

கோரிக்கையை ஏற்று உடனடியாக வருகைதந்த நகர்மன்ற தலைவர் K.A.S. முத்து முஹம்மது அவர்களுக்கும், நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் 11வது வார்டு உறுப்பினர் சார்பாக நன்றிகளை தெரிவிக்கப்பட்டது.
வாசகர்கள் கருத்து