காயல்பட்டினத்தில் 36 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி, அரசுப் பொது நூலகத்தில் கடந்த 23 - 02 - 2022 புதன்கிழமை தொடங்கியது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் திரு. R. மோகனன் தலைமை ஏற்றார்.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் அல்ஹாஜ் M K முஹைதீன் தம்பி, காயல்பட்டணம் வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் M A அஹமத் முஹியத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட நூலக அலுவலர் திருமதி மா. ரெங்கநாயகி புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார். திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் திரு M. T. வேலவன் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் வாவு. M.M. சம்சுதீன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

சாத்தான்குள ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ( தனி) திரு. ரஞ்சித், திருச்செந்தூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் திரு. ஆனந்த குமார் மற்றும் காயல் இலக்கிய முற்ற ஒருங்கிணைப்பாளர் காயல் S.E. அமானுல்லாஹ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். அரசு நூலக வாசகர் வட்ட உறுப்பினர் திரு. பா.முத்துக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் திரு.R. மகேந்திரன், அரசு நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் திரு. மு. அப்துல் ரசாக், அரசு நூலகர் திரு. அ. முஜீப் ஆகியோர் நிகழ்ச்சிகுரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பத்தாயிரம் தலைப்புக்களில் நூல்களைக்கொண்ட இந்தக் கண்காட்சி 06 - 03 - 2022 அன்றுடன் நிறைவடைகிறது.
தகவல் :
ஆசிரியர் மு. அப்துல் ரசாக்.
வாசகர்கள் கருத்து