காயல்பட்டணம் #நகர்மன்றத்தலைவர், #துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பாராட்டி வாழ்த்தும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
(04/03/2022) வெள்ளிக் கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைத் தலைவர் அல்ஹாஜ் M.K. முஹியத்தீன் தம்பி (துரை காக்கா) தலைமை ஏற்றார்.

தி.மு.கழக தூத்துக்குடி மாவட்டத் துணைச் செயலர், அல்ஹாஜ் S.I. அப்துல்காதர் முன்னிலை வகித்தார்.

அல்ஹாஃபிழ் M.S.L. முஹியத்தீன் இறைமறை ஓத தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து,நகராட்சி ஆணையர் திருமதி மா. சுகந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர் சுகு என்ற ரங்கநாதன் உறுப்பினர்கள் சார்பில் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில், "இத்தேர்தலில் மூலம் நகரில் சமூகங்களுக்கு மத்தியில் நாம் எதிர்பார்த்த ஐக்கியம் மீண்டும் நிலைபெற்றது"
எனக் குறிப்பிட்டார்.

ஐக்கியப் பேரவை துணைச்செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் , ம.தி.மு.க. தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் காயல் S.E. அமானுல்லாஹ், முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,வார்டு வரையறை சம்பந்தமாக மன்றத்தில் முதல்தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் பேரவை நிர்வாகிகளால் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேலும், K.T.M. தெரு பள்ளிக்கூட வளாகத்தில் ஐந்து வகுப்புகள் கட்ட, நிதி ஒதுக்க வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் பேரவையின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேரவையின் வேண்டுகோளை ஏற்பதாக வாக்களித்தார்.

நிறைவாக ஏற்புரை வழங்கிய K.A.S. முத்து முஹம்மது, துணைத்தலைவர் Z.A.சுல்தான் லெப்பை ஆகியோர் தங்களை பொறுப்புக்களுக்கு தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும்,காயலின் முன்னேற்றத்திற்கு உழைப்பதாக உறுதியளித்தனர்.

மாண்புமிகு அமைச்சர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கு இந்நிகழ்ச்சியில் பலர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

நிகழ்ச்சியை அல்ஹாபிழ் M.I. மஹ்மூது சுல்தான் நெறிப்படுத்தினார்.

ஐக்கியப் பேரவையின் துணைத்தலைவர் S.H.பாதுல் அஸ்ஹப் ஆலிம் அவர்களின் நன்றி உரைக்குப்பின் நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

வாசகர்கள் கருத்து