கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நகராட்சி தேர்தலின் முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிடப்ட்டது. இதில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு பதவிபிரமாணம் செய்துவைக்கும் நிகழ்வு இன்று (02/03/2022) காலை 10:30 மணிக்கு நகராட்சியின் கூட்ட அரங்கில் நகராட்சி ஆணையர் செல்வி M. சுகந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி ஆணையர் அவர்கள் 1-வது வார்டு உறுப்பினர் திருமதி R. மாரிஸ்வரி அவர்களுக்கும், 2-வது வார்டு உறுப்பினர் திரு. E. முருகன் அவர்களுக்கும், 3-வது வார்டு உறுப்பினர் A. கதிரவன் அவர்களுக்கும், 4-வது வார்டு உறுப்பினர் S. தஸ்நேவிஸ் ராணி அவர்களுக்கும், 5-வது வார்டு உறுப்பினர் ஜனாபா M.K.S. ரஸீதா பீவி அவர்களுக்கும், 6-வது வார்டு உறுப்பினர் ஜனாப் A.A. அஜ்வாது அவர்களுக்கும், 7-வது வார்டு உறுப்பினர் ஜனாபா M.I. ரோஸியா பானு அவர்களுக்கும், 8-வது வார்டு உறுப்பினர் ஜனாப் S. மெய்தீன் அவர்களுக்கும், 9-வது வார்டு உறுப்பினர் திருமதி N. பூங்கொடி அவர்களுக்கும், 10-வது வார்டு உறுப்பினர் திரு. R. ரெங்கநாதன் அவர்களுக்கும், 11-வது வார்டு உறுப்பினர் ஜனாபா. செய்யது ஆசியா ஃபஹ்மிதா அவர்களுக்கும், 12-வது வார்டு உறுப்பினர் ஜனாபா N.J.S. முத்து ஜெய்னம்பு அவர்களுக்கும், 13-வது வார்டு உறுப்பினர் திருமதி V.M.S. முஹம்மது செய்யது ஃபாத்திமா அவர்களுக்கும், 14-வது வார்டு உறுப்பினர் ஜனாப். L.S. அன்வர் அவர்களுக்கும், 15-வது வார்டு உறுப்பினர் ஜனாப். K.A.S. முத்து முஹம்மது அவர்களுக்கும், 16-வது வார்டு உறுப்பினர் ஜனாப். S.A.K. அபுபக்கர் சித்தீக் அவர்களுக்கும், 17-வது வார்டு உறுப்பினர் திருமதி G. ராமஜெயம் அவர்களுக்கும், 18-வது வார்டு உறுப்பினர் ஜனாப். J.A. சுல்தான் லெப்பை அவர்களுக்கும் பதவி பிரமானம் செய்துவைத்தார்கள்.
இறுதியாக நாட்டுப்பன்னுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன, இந்நிகழ்ச்சியில் நகர்மக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
புகைப்படங்கள் உதவி :
சகோ. அன்சாரி
ஐக்கியப் பேரவை என்று சொல்லி வெற்றி பெற்று விட்டு திமுகவின் பெயர் கூறி பதவி ஏற்றதும் திமுக கரைதுண்டு அணிந்திருப்பதும் ஊர் ஐக்கியத்திற்கு செய்த மாபெரும் கேடு. இதற்கு பேரவை என்ன செய்ய போகிறது?