ads



முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து நகரில் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
முத்தலாக் முறைக்கு மத்திய அரசு தடைவிதிக்கும் மசோத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து நகரில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் துணைத் தலைவர் ஜனாப். தாஜூத்தீன் தலைமைதாங்கினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டச் செயலாளர் ஜனாப். மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் ஜனாப். இப்ராஹீம் மக்கி, நகர கிளை தலைவர் ஜனாப். முஹம்மது ஹஸன், பொருளாளர் ஜனாப். மஹ்மூது லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
iuml1.jpg
இந்நிகழ்வில், நகர பிரமுகர் ஜனாப். ஜமால் முஹம்மது, SDPI கட்சியின் மாவட்ட தலைவர் மவ்லவி அஷ்ரஃப் அலி ஃபைஜி, தமுமுக நகர ஜனாப். ஜாஹிர் ஹூஸைன், ம.தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜனாப். காயல் S.E. அமானுல்லாஹ், அம்மா பேரவை நகர செயலாளர் ஜனாப். L.S. அன்வர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சியின் நகர துணைத் தலைவர் ஜனாப். முஸ்தஃபா கமால், ஜனாப். பாலப்பா அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
iuml.jpg
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரமான ஜனாப். K.A.M. முஹம்மது அபூபக்கர் கோரிக்கையை விளக்கி பேசினார். முஸ்லீம் லீக் மாவட்ட துணைத் தலைவர் ஜனாப். மன்னர் பாதுல் அஷ்ஹாப் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

இந்த ஆர்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, SDPI, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் நகரின் பொதுநல அமைப்புகளும், நகரின் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

புகைப்படங்கள் :
சகோ. S.K. சாலிஹ்.
5 Jan 2018

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
Pst Abdulcader Says:
Jan 5 2018 9:53AM (IST)

அனைத்து கட்சிகளும் இயக்கமும் முன்னின்று நடத்திய இக்கண்டண பெருங்கூட்டம் வருங்காலம்திலும் ஒற்றுமைக்கு இலக்கணமாய் திகழட்டும் இக்கட்சி தலைமைதாங்கியது என்பதைவிட இந்த சமூகமே தலைமைதாங்கியது ஷரீயத் நம் சுவாசம் எக்குதிக்கும் பரவட்டும் இன்ஷா அல்லாஹ்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top