ads



நகர்மன்ற தலைவர் இன்றுவரை...

A+ A-
கருத்துக்கள் காண கருத்துகள் பதிய
உள்ளாட்சி தேர்தல் பிப்:19ல் நடைபெற்று பிப்:22ல் முடிவுகள் வெளிவந்தன. மார்ச்:02ல் பதவிபிரமானம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்களால் மார்ச்:04ல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் K.A.S. முத்து முஹம்மது ஆலிம்.
P V 9_1.jpg
காயல்பட்டினத்திற்கு வரும் குடிநீர் கலங்களாக வருவதாக புகார் வந்ததையடுத்து, உடனடியாக குடிநீரேற்று நிலையம் அமைந்துள்ள பொன்னன்குறிச்சிக்கு 5ஆம் தேதி இரவு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார் தலைவர். அங்குள்ள குடிநீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யவும், பலதினங்களாக பழுதாகி இருந்து மின்மோட்டரை உடனடியாக பழுதை நீக்கவும் அல்லது தேவைபடின் புதிய மின்மோட்டர் வாங்கவும் உத்தரவிட்டார்கள்.
W V 1.jpg
காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் பகுதி வாரியாக பணிகளை மேற்கொள்ள சரியாக பிரித்து அனுப்பப்படுகிறார்களா என்பதனையும்,  அவர்களின் குறைகளையும் கேட்டறிவதற்காகவும் 07ம் தேதி அதிகாலையிலேயே நகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று (08/03/2022) நகரில் வெறிநாய்கள் பொதுமக்களை கடித்துவிட்ட செய்தியறிந்த நகர்மன்ற தலைவர் அவர்கள், 3 நபர்களை கடித்த வெறிநாயை நகராட்சி ஊழியர்களை கொண்டு பிடித்துவிட்டதாகவும், வருகின்ற வாரம் நாய் பிடிப்பதில் தேர்ச்சிபெற்ற குழுமத்தை நம்நகருக்கு அழைத்துவந்து நகர்மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எஞ்சிய நாய்களையும் பிடிக்க ஏற்பாடுசெய்யப்படும் என உத்திரவாதம் அளித்துள்ளார்கள்.

நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் சிறப்புடன் நடைபெற நகர்மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
9 Mar 2022

வாசகர்கள் கருத்து

1 Comment(s)

  • வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
  • எங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
  • தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  • இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.
  • தங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.
  • முரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
ஹாஜி மலங் Says:
Mar 9 2022 11:07PM (IST)

நகர்மன்ற தலைவரின் சேவைகள் மகத்தானது தலைவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

Leave a comment

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
குறியீடு
Captcha
 
Top